search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் வாகன சோதனை"

    மேற்கு வங்காளம் மாநிலம் வழியாக 27 கிலோ கடத்தல் தங்கத்தை பதுக்கி கொண்டு சென்றவரை சிலிகுரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் கைது செய்தனர். #27kggold #smugglinggoldseized #goldseizedinsiliguri
    கொல்கத்தா:

    நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் வழியாக பெருமளவிலான தங்கம் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகிறது. வருவாய் துறை அதிகாரிகள் அவ்வப்போது நடத்தும் சோதனைகளில் பெருமளவில் கடத்தம் தங்கம் பிடிபடுவதும் வாடிக்கையாகி விட்டது.

    அவ்வகையில், சிலிகுரி மாவட்டம் வழியாக ஒருவர் காரில் கடத்தல் தங்கம் கொண்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து நேற்று சிலிகுரி மாவட்டம் முழுவதிலும் போலீசார் துணையுடன் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, சேவோக் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். இந்த சோதனையில் கார் சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 கிலோ தங்க கட்டிகள் மற்றும் 10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கடத்தல் தங்கத்தை சிக்கிம் மாநிலத்துக்கு கொண்டு செல்ல முயன்ற எஸ்.டி.பூட்டியா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். நேற்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் உள்நாட்டு மதிப்பு சுமார் 6 கோடியே 80 லட்சம் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #27kggold #smugglinggoldseized #goldseizedinsiliguri
    ×